Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

வரதட்சணை என்கிற கொடிய சமுதாய நோய் ‌.
உங்கள் சிந்தனைக்கு


ஒரு விசுவாசி பரலோக ராஜ்ஜியத்தின் குடிமகனாக இருந்தாலும்
இந்த உலகத்தில் ஒரு அரசாங்கத்தின் குடிமகனாக இருக்கிறான். விசுவாசிகளைப் பொருத்த அளவில் அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை இருக்கிறது.மறுபடியும் பிறந்த‌ ஒரு விசுவாசி தான் வாழ்கின்ற அரசின் சட்ட திட்டங்களுக்குக் கீழ்ப்படிய வேண்டும்.

நாட்டினுடைய சட்ட திட்டங்களை மதிக்க வேண்டும். அதைப் பின்பற்ற வேண்டும். அதை மீறக் கூடாது.

இதைத்தான் வேதம் வலியுறுத்திச் சொல்கிறது.

அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் அடங்கி நடவுங்கள். ஏனெனில் இறைவன் அனுமதிக்காமல் எந்த அதிகாரமும் இல்லை. இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகாரங்கள் இறைவனாலேயே நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.
ரோமர் 13

பரலோகத்தில் குடிமகனாக இருக்கிறவன் நான் தான் வாழ்கின்ற அரசாங்கத்திற்கும் கீழ்ப்படிதல் உள்ளவான இருக்க வேண்டும்.
இதைச் சபை கண்டிப்பாகப் போதிக்க வேண்டும்.
இந்த உலகத்திற்கு விசுவாசிகள் ஒளியாக உப்பாக இருக்க வேண்டும் என்றால் இந்தச் சத்தியத்தை சரியாகப் போதிக்க விட்டால் அது சாத்தியப்பட முடியாது.
வெறுமனே உலக ஆசீர்வாதங்களை மட்டும் பேசி ஒரு மனிதனை பரலோகத்திற்கு கொண்டு செல்ல முடியாது.
தமிழக கிறிஸ்துவத்தில் தலைவிரித்து ஆடுகிற ஒரு தீமை வரதட்சனை கொடுமை.
நல்ல பெண்களாக இருந்தும் திருமணமாகாமல் இருப்பதற்கு ஜாதி மட்டும் காரணம் அல்ல அதோடு சேர்ந்திருப்பது
வரதட்சணை என்கிற கொடிய சமுதாய நோய் ‌.
இந்தக் கொடியை நோய் மற்ற மதத்தவர்களை பாதித்திருப்பது போலக் கிறிஸ்தவத்தையும் கவளிகரம் செய்திருக்கிறது‌.

கிறிஸ்தவ குடும்பங்களில் சில நேரங்களில் ஜாதியை கூடப் பார்ப்பதில்லை ஆனால் தங்கள் மகனுக்கு இவ்வளவு நகை கொடுக்க வேண்டும், இவ்வளவு பணத்தை கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஒரு பெண்ணைத் தங்கள் குடும்பத்தை ஏற்றுக் கொள்வது இந்திய அரசமைப்பு சட்டப்படி தவறு


வரதட்சணை தடுப்புச் சட்டம் – 1961 (Dowry Prohibition Act, 1961)
இயற்றப்பட்ட ஆண்டு: 1961
அமல்படுத்தப்பட்ட நாள்: 1 ஜூலை 1961.

இந்தச் சட்டத்தின்நோக்கம்: திருமணத்தில் வரதட்சணை கொடுத்தல், பெற்றல், கேட்பதைத் தடுப்பது.
முக்கிய அம்சம்: வரதட்சணை கேட்பவருக்கும் கொடுப்பவருக்கும் குறைந்தது 5 ஆண்டு சிறை + ₹15,000 அபராதம்.


எப்படி ஒரு அரசு ஊழியர் கையூட்டு வாங்குவது தவறோ அதுபோல் பெற்றோர்கள் வரதட்சணை கேட்டு பெண்ணின் பெற்றோரை நிர்பந்திப்பதும் தவறு.

இப்படி சட்டங்கள் தெளிவாக இருக்க இதை சபை விசுவாசிகள் கவனிக்க தவறுவது ஏன்.
விசுவாசிகள் அரசு பணியில் இருக்கும்போது சட்டத்துக்குப் பயந்து கையூட்டு வாங்காமல் நேர்மையாக இருப்பார்கள்.
உண்மைதான் ஆனால் அதே விசுவாசிகள் திருமணம் என்று வந்துவிட்டால் பெண்ணைப் பெற்றவர்களை நிர்பந்தம் செய்து நகைகளையும் கேட்டுப் பணத்தையும் கேட்டு லஞ்சமாகப் பெற்றுக் கொள்வது எந்த வகையில் நியாயம்.
அதுவும் பெந்தேகோஸ்தே விசுவாசிகள் நகை போடாவிட்டால் அந்த நகைக்குச் சமமாகப் பணத்தைக் கொடுத்து விடுங்கள் அதுவும் அந்தப் பணம் பெண்ணின் கணக்கில் வர வைக்கமாட்டார்கள் நேராக மணமகனின் பெற்றோரிடம் கொடுக்க வேண்டுமாம்.
இப்படி லஞ்சம் வாங்க மாட்டேன் என்று பெருமை தட்டிக் கொள்பவர்கள் வரதட்சணை வாங்கி அரசாங்க சட்ட திட்டத்தை மீறுகிறார்கள்.
இந்தப் புரிதல் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தெரியவில்லை. சபைகள் ஜாதி ஒழிப்பு பற்றி ஓரளவுக்கு பேசுகிறார்கள். அவர்கள் இந்த உபதேசத்தை கண்டிப்பாகப் போதிப்பதில்லை.அநேக சபை மேய்பர்கள் தன்னுடைய வசதிக்காக இது போதிப்பதே இல்லை.
ஏதோ மேம்போக்காக இது போதித்து கடந்து சென்று விடுவார்கள்.
உலகத்திற்கு வெளிச்சமாக வாழ வேண்டிய விசுவாசிகள், ஊழியர்கள் அரசாங்க சட்டத்தை மீறித் தேவனுடைய பிரமாணத்தை மீறுகிறார்கள். இவர்கள் எப்படி பரலோகம் போவார்கள். அரசாங்க சட்டத்தைத் தெரிந்தும் துணிகரமாக மீறுபவர்கள் ஒருநாளும் தேவனுடைய ஒளியின் அரசுக்குள் பிரவேசிக்க முடியாது‌.
உலகப் பொருளுக்காகச் செல்வங்களுக்காக அரசாங்க சட்டத்தை மீறிப் பரலோக ராஜ்யத்திற்கு பிரவேசிக்க முடியாத சூழ்நிலையை இந்த வரதட்சனை மாற்றிவிடும்.
இது விசுவாசிகளுக்கும் சபைகளுக்கும் ஒரு எச்சரிக்கை. பெண்ணின் தகப்பனிடம் பணத்தை கையூட்டையும் வாங்கிக்கொண்டு பெற்றோர் ஆசையோடு 20 ஆண்டுகள் 25 ஆண்டுகள் வளர்த்த பெண்ணையும் திருமணம் என்கிற பெயரில் அடைவது கொடுமையிலும் கொடுமை.
இவர்கள் என்னதான் ஊழியம் செய்தாலும் அடிப்பாடி குதித்தாலும்
கோடி கோடியாய் ஊழியர்களுக்குக் காணிக்கை கொடுத்தாலும், வட இந்திய ஊழியங்களுக்கு வாரி வழங்கினாலும் இந்தக் கொடுமையைத் தெரிந்து துணிகரமாய் செய்வதன் மூலம் அவர்களுக்குப் பரலோக வாசல் அவர்களுக்கு அடைப்பட்டிருக்கிறது. இதை என்பதை அறியாமல் இருப்பது எவ்வளவு பரிதாபம் ‌
அதைவிட பரிதாபம் அவர் இருக்கின்ற சபைகள் அதைப் பொருட்படுத்தாமல் இருப்பதுதான்