*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்.* *வேத பாடம் 7* யோசபாத்தின் இரண்டு பக்கங்கள்.
*உங்கள் சிந்தனைக்கு.*
*2 நாளாகமம் அல்லது* *குறிப்பேடுகள்* *புத்தகம்.*
*வேத பாடம் 7*
யோசபாத்தின் இரண்டு பக்கங்கள்.
யோசபாத் சுமார் 25 ஆண்டுகள் ஆட்சி செய்தான். அறுபதாவது வயதில் மரணம் அடைந்தான்.
இவனைப் பற்றின குறிப்புகள் வேதத்தில் 77 இடங்களில் வருகிறது.
இவனுடைய தகப்பனுடைய பெயர் ஆசா. இவன் தன் தகப்பனை போல் கர்த்தரை மறுதலிக்காமல் கடவுளை
தேட ஆரம்பித்தவன்.
யூத தேசத்தை ஆண்ட ஒரு சில சிறந்த மன்னர்களில் இவனும் ஒருவன்
யோசபாத்தின் ஆரம்ப வாழ்க்கை, கடவுளுக்கு உண்மையாய் இருந்தான்.
கர்த்தரைத் தேடினான்.
அந்நிய தெய்வங்களை அகற்றினான்.
ஆசாரியர், லேவியரை அனுப்பி மக்கள் மத்தியில் தேவனுடைய வார்த்தையைப் போதிக்க வைத்தான்.
இந்தக் காரியம் இவன் செய்த சீர்திருத்தங்களில் மிக முக்கியமானது.
கடவுளுடைய வார்த்தைகளை ஜனங்கள் மத்தியில் போதிக்கவும், விதைக்கவும் இவன் எடுத்த இந்த முயற்சி இன்றைய சபைத் தலைவர்களுக்கு ஒரு மிகப்பெரிய மாதிரி.
இன்றைக்கு சபைத் தலைவர்கள் தேவனுடைய வசனத்தை விசுவாசிகளுக்கு விதைக்க வேண்டும். படிக்கக்கூடிய, தியானிக்கக்கூடிய ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
அப்பொழுது மட்டுமே ஒரு வைராக்கியமுள்ள சந்ததியைக் கர்த்தருக்காக எழுப்ப முடியும்.
ஒவ்வொரு நகரிலும் நியாயாதிபதிகளை நியமித்தான்.
இவனுடைய ஆட்சி காலத்தில் நீதி பரிபாலனம் நேர்மையாக நடந்தது.
போரிலும் பிரச்சனைகளிலும் முதலில் தேவனை நோக்கிப் பார்த்தான்.
வேதாகம ஆதாரம்
*2 நாளாகமம். 17, 19, 20 வது அதிகாரங்கள்"
இவன் செய்த தவறு
தன் மகனுக்கு இஸ்ரவேலரை பாகால்களுக்கு வழிநடத்திய ஆகாப் மன்னனின் மகள் அத்தாலியாளை திருமணம்செய்து வைத்தான்.
அதன் மூலம் யூத தேசத்தை ஆட்சி செய்த ஒரே பெண்மணி அத்தாலியாள் என்கிற வரலாறு படைக்கப்பட்டது.
*2 நாளா 19:2,18:1,21:6*
2 *இராஜா8:18*
தேவன் எச்சரித்தபோதும், போரில் ராமோத் கீலேயாத்தைத் தாக்குவதற்கு யோசபாத்தைத் தூண்டியதன் நிமித்தமாக அந்தப் போரில்
கலந்து கொண்டான்.
கடவுளுடைய தீர்க்கதரிகளின் எச்சரிப்பை
புறக்கணித்தான்.
அகசியாவுடன் (ஆகாபின் மகன்) வியாபார ஒப்பந்தம்
ஏற்படுத்தி
கடலில் வர்த்தகம் செய்ய கப்பல்களைச் செய்தான்.
ஆனால் அகசியாவுடன் இணைந்ததற்காக, கர்த்தர் அந்த வேலைகளை நாசமாக்கினார்.
கப்பல்கள் உடைந்து போனது. இந்தக் காரியம் கைகூடி வரவில்லை.
இப்படியாக நன்றாக ஆரம்பித்த யோசபாத்
இறுதி நாட்களில்
கர்த்தருக்கு பிரியம் இல்லாத பல காரியங்களைச் செய்தான்.
குறிப்பாக கர்த்தருக்கு பிரியம் இல்லாத உறவுகளை ஏற்படுத்தியது, கர்த்தருக்கு விரோதமானவர்களோடு நட்பு பாராட்டியது. அவர்களோடு வியாபாரத்தில் ஈடுபட்டது.,இப்படி பல காரியங்கள் அவனுடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் மறுபக்கங்கள்.
விசுவாசிகளாகிய நமக்கு நாட்கள் ஆக ஆக கர்த்தரை பற்றி உள்ள பயம் மங்கிப் போய் விடுகிறது. ஆரம்ப நாட்களில் எல்லா காரியங்களிலும் தேவனுடைய சித்தத்தை கேட்டு கேட்டு பின்பற்றிய நாம் பின் நாட்களில் ஒரு மமதையுடன் ஆவிக்குரிய பெருமையுடன் நமக்குள் கர்த்தர் இருக்கிறார் என்கிற அகந்தையுடன் கடவுளின் சித்தத்தை செய்ய தவறி விடுகிறோம்.
இறுதி மட்டும் தாழ்மையாக இருந்து தேவனுடைய சித்தத்தை ஒவ்வொரு காரியத்திலும் ஆராய்ந்து அறிந்து செயல்படுத்தினால் நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையின் ஆரம்பத்தை போல் முடிவும் நன்மையாக இருக்கும்.
என்னதான் யோசபாத் மக்களைப் போதிக்கும் வழியில் ஆசாரியர்களை நியமித்திருந்தாலும் இறுதியில் இவன் கர்த்தருடைய கீழ் முடியாமைக்குள்ளாகக் கடந்து போனது பரிதாபமானது.
ஆண்டவருடைய வசனத்தை மற்றவர்களுக்கு விதைக்கின்ற நாமே சில நேரங்களில் அவருடைய சித்தத்தை செய்யத் தவறி விடுகிறோம் என்பது நிதர்சனமான உண்மையாக இருக்கிறது.
இறுதி மட்டும் கடவுளுடைய வழியில் நிலைத்து நிற்கக் கிருபைகளை தேவன் நமக்குத் தருவாராக!