2 நாளாகமம் புத்தகம் வேத பாடம் எட்டு
*உங்கள் சிந்தனைக்கு.*
*2 நாளாகமம்*
*குறிப்பேடுகள்* *புத்தகம்*
*வேதபாடம் 8*
பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை
ஏதோ ஒரு சம்பவங்களாக பார்க்க கூடாது.
பழைய பாட்டு நிகழ்வுகளை இரண்டு அல்லது மூன்று வகைகளில் நாம் தியானிக்கலாம்.
1.பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து எவ்வாறு மையப்படுத்தப்பட்டு இருக்கிறார்.
2. பழைய ஏற்பாட்டில் இறையியல் கோட்பாடுகள் எவ்வாறு விளக்கப்பட்டு இருக்கிறது.
3. முக்கியமானதாக அந்த நிகழ்வுகள் இன்றைய நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எப்படி பொருத்தமாக இருக்கிறது.
அது நமக்கு சொல்லும் பாடங்கள் என்ன? இந்த மூன்று காரியங்களின் அடிப்படையில் நாம் பழைய ஏற்பாட்டை தியானிக்கும்போது தான் அந்த தியானங்கள் நமக்கு பயனுள்ளதாக இருக்கும் .
வெறுமனே கதைகளாகவோ, நிகழ்வுகளாகவோ, படித்தால், தியானித்தால் அதனால் நமக்கு எந்த பயனும் இல்லை.
தவறான திருமண உறவால் வீழ்ந்து போன யூதா அரசன் யோராம்.
யோராம், யூதா ராஜாவாகிய யோசபாத்தின் மகன்.
இஸ்ரவேல் ஜனங்களை வழி விலகச் செய்த ஆகாப் மன்னனின் மகள் அத்தாலியாளை திருமணம் செய்தான்.
இதற்கு மிகச்சிறந்த யூத அரசனும் அவனுடைய தகப்பனுமான யோசபாத்தும் ஒரு காரணம்.
இந்தத் திருமணம் இவனுடைய ஆசீர்வாதத்தோடு அல்லது சம்மதத்தோடு நடந்திருக்க வேண்டும்.
இவனுடைய
ஆட்சி சுமார் 8 ஆண்டுகளே.
இவன் ஆட்சியை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு எந்த தீங்கும் இளைக்காத அவனைவிட நல்லவர்களாக இருந்த தன்னுடைய சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் படுகொலை செய்தான்.
21:6,13
அவன் இஸ்ரயேல் அரசர்களின் வழியிலே நடந்து ஆகாபின் வீட்டார் செய்ததுபோல் செய்தான். ஏனெனில் அவன் யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
அடுத்தது
அவன் யூதாவின் குன்றுகளில் வழிபாட்டு மேடைகளையும் கட்டி வழிபடுவதன் மூலம், எருசலேம் மக்களை ஆவிக்குரிய வேசித்தனத்தில் ஈடுபடச் செய்தான்.
இவ்வாறு யூதாவை வழிதவறச் செய்தான். ஆகாபோடு தன்னை முழுவதுமாக அடையாளப்படுத்திக் கொண்டான்.
இதனால் எலியா தீர்க்கதரிசியினுடைய வார்த்தையின்படி
தீராத குடல் நோயினால் வியாதிப்பட்டு அந்த வியாதியினால் குடல்கள் வெளியே வந்து பாதிக்கப்பட்டு மரித்துப் போனான்.
இது மட்டுமல்ல
கடவுள் அவனுக்கு விரோதமாக பெலிஸ்தியர்களையும் அரபியர்களையும் எழுப்பி அவர்கள் இவருடைய அரண்மனையில் புகுந்து செல்வங்களை கொள்ளை அடித்து அவனது மனைவிகளையும் பிடித்துக் கொண்டு போனார்கள்.
இளைய மகன் அகசியாவைத் தவிர வேறு ஒரு மகனும் அவனுக்குத் தப்பவில்லை.
இப்படியாக அவனது எட்டு ஆண்டுகால அரசாட்சி பரிதாபமாக முடிந்தது.
38 வயதிற்குள்ளாகவே மரித்து விட்டான். அவன் மரித்துப் போனதை குறித்து யாரும் துக்கம் கொண்டாடவில்லை.
விரும்பப்படாதவனாகவே அவன் காணப்பட்டான்.
இதன் மூலம் தேவன் உணர்த்தும் பாடங்கள்.
1திருமண உறவுகளில் தேவனுடைய சித்தத்தை செய்ய தவறும் பொழுது அதனுடைய விளைவுகளை நாம் ஒருபோதும் சரி கட்ட முடியாது.
ஆவிக்குரிய வாழ்க்கை முதல் கோணல் முற்றும் கோணலமாக மாறிவிடும்.
2. பதவிக்கு வந்ததும் பதவி வெறிகொண்டு தன்னுடைய எதிராளிகளை சொந்த பந்தமாக இருந்தாலும் ரத்த சம்பந்தமான உறவுகளாக இருந்தாலும் அவர்களை பகைத்து ஒதுக்கி விடக்கூடாது.
தனக்கு தீமை செய்யாதவர்களாக இருந்தாலும் அவர்களை போட்டியாளராக கருதி அவர்களை ஒழித்துக் கட்டுகிற பணியில் ஈடுபடக் கூடாது.
இது ஆவிக்குரிய வாழ்க்கையில் இன்றைய சபைகளில் சரளமாக நடைபெறுகிறது.
நமக்கு துரோகம் செய்யாமல் இருந்தாலும் அவர்கள் நமக்கு நன்மையே செய்திருந்தாலும் பின் நாட்களில் ஏதோ ஒரு வகையில் நமக்கு போட்டியாளராக வருவார்கள் என்று தவறாக கணித்து அவர்களை பழிவாங்க கூடாது.
நமக்கு உயர்வை அளிப்பவர் கடவுள். உயர்வை கொடுத்த ஆண்டவர் நாம் அவருக்கு பிரியமாக இருக்கும் வரையில் அந்த பதவியையோ உயர்வையோ யாரும் தட்டிப் பறிக்க முடியாது.
The feeling of ministerial insecurity is considered the greatest threat to the future.
இந்த உணர்வை சரியான முறையில் எதிர்கொள்பவனே உண்மையான தலைவன்.