Loading...
Bro.Ezekiel
Chennai
+91 9444447744

Bible Study

தேவனுக்கு விரோதமாக கலகம் செய்வது என்றால் என்ன?
உங்கள் சிந்தனைக்கு:
தேவனுக்கு விரோதமாக கலகம் செய்வது என்றால் என்ன?
காதேஸ்பர்னேயாவில் நடந்தது என்ன?
இஸ்ரவேல் மக்கள் கலகம் செய்ததாகசொல்லப்பட்டிருக்கிறது.(எண்ணா14:9)
கலகம் என்றால் என்ன?

தேவனுடைய சித்தத்தை செய்ய மறுப்பது.

தேவனுடைய சித்ததிற்கு எதிராக இருப்பது.

தேவனுடைய சித்ததிற்கு மாற்று வழி கண்டுபிடிப்பது.

தேவனுடைய சித்தத்தை செய்பவர்களை வழி விலக செய்வது.
தேவ சித்தம் செய்பவர்களை தடுத்து அவர்களை தேவனுக்கு விரோதமாக தூண்டி விடுவது.
தேவ சித்தம் செய்பவர்களை எதிர்த்து நிற்பது.

தேவனுடைய வல்லமையை சந்தேகப்படுவது.

தேவன் மீது விசுவாசம் வைப்பவர்களை சோர்வடையச்செய்வது.

இதைத்தான் அன்றைக்கு இஸ்ரவேலர் செய்தார்கள்.

தேவனுடைய வார்த்தையை முதலில் சந்தேகப்பட்டார்கள்.
உபா1:22
அதற்கு ஆதரவாக இருப்பவர்களை
சோர்வடையச்செய்தார்கள்.
எண்ணா14:1
எகிப்திற்கு திரும்பி போக மாற்று வழியை முயற்சித்தார்கள்.எண்14;3

தங்களுடைய சுய முயற்சியில் கானானுக்குள் பிரவேசிக்க முயற்சி செய்தார்கள்.
எண்ணா14:40

மிகப்பெரிய ஜனக்கூட்டத்தை திரட்டி தலைவர்களை எதிர்த்தார்கள்.
எண்ணா15:1

தேவனுடைய வல்லமையை குறைவாக மதிப்பிட்டார்கள்.

தேவனை நம்பாமல் தாங்கள் கண்ட காட்சிகளின் அடிப்படையில் விசுவாசித்தார்கள்.
எண்ணா13:32,33

ஒரு மனிதனுடைய வெற்றி எதிலே இருக்கிறது என்றால் அவன் தன் வாழ்வில் எந்த அளவுக்கு தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுகிறான் என்பதில் தான்.
இயேசு கிறிஸ்து அவர் செய்த அடையாளங்களினால் அல்ல. அவர் செய்த உபதேசங்களினால் அல்ல. அவர் அனுபவித்த பாடுகளினால் அல்ல.
தன்னை அனுப்பின பிதாவின் சித்ததத்தை முழுமையாக நிறைவேற்றிய செயலின் அடிப்படையில் தான் அவருடைய வெற்றி அமைந்தது.

நாமும் கூட நம்முடைய செல்வாக்கு ,அந்தஸ்த்து, நாம் செய்கிற ஊழியம், சம்பாதித்த ஆத்மாக்கள், நடத்திய சபைகள் இவைகளின் அடிப்படையில் அல்ல. நம்மை தெரிந்துகொண்ட
தேவனுடைய நோக்கத்தை எப்படி நிறைவேற்றினோம் என்பதில்தான் நம்முடைய
வெற்றி உள்ளது.தேவ சித்தத்தை நிறைவேற்றாத அதற்கு எதிர்த்து நிற்கிற எந்த ஒரு மனிதனும் ஒரு வழியில் கலகக்காரரே.