வேதத்திற்கு சபை கட்டுபட்டதா அல்லது சபைக்கு வேதம் கட்டுப்பட்டதா?
உங்கள் சிந்தனைக்கு:
Whether the Church is under the authority of the Scripture or the Scripture is under influence of the Church?
வேதத்திற்கு சபை கட்டுபட்டதா அல்லது சபைக்கு வேதம் கட்டுப்பட்டதா?
இதைப் பற்றிய விவாதத்தில் எது சரி என்று பார்க்கும் பொழுது சபை வேதத்திற்கு கட்டுப்பட்டது என்பதுதான் உண்மை.
சபை வேதத்திற்கு கட்டுப்பட்டு இருக்கும்பொழுது உபதேசங்கள் வேதத்தின்படி சரியாக இருக்கும்.
ஆனால் இன்றைக்கு காணப்படும் காரியம் என்னவென்றால் வேதம் சபைக்கு கட்டுப்பட்ட மாதிரி பலவிதமான உபதேசங்கள்,வேதத்திற்குப் புறம்பான சிந்தனைகள், இதுவரை முன்னோர்கள் சொல்லி வந்த அடிப்படை உபதேசங்களை திரித்து அதன் கருத்துக்களை தவறு என்று சொல்லி ,மனிதர்கள் தங்கள் அனுபவத்தை, கனவில் கண்ட காரியங்களை, முக்கியமில்லாத உபதேசங்களை முக்கியப்படுத்தி, அதைசபையின் உபதேசம் என்று சொல்லி தேவன் அருளிய வேதத்தை சபை என்கிற கட்டிடத்துக்குள் அடக்கி வைப்பதை பார்க்கிறோம்.
வேதமே நமக்கு பிரதானம் .
அந்த வேதம் நமக்கு போதும் என்பதை மறந்து வேதம் சபைக்கு கட்டுப்பட்டது என்று தலைவர்கள் சொல்லாமல் சொல்கிறார்கள்.
.இன்று சபைக்கென்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது.
வேதமே சபையின் அதிகாரம்.
இன்றைக்கு தனிநபர்களை மேன்மை பாராட்டி ,அவர்கள் சொல்வது தான் வேதம் , அவர்கள் போதிப்பது தான் உபதேசம், என்று மாறிவிட்டது. அவர்கள் காண்கிற காட்சி, எழுதுகின்ற எழுத்து, அவர்கள் பேசும்பேச்சு இன்று எழுதப்படாத வேதமாக காணப்படுகிறது.
விவாசிகளுக்கு எது அடிப்படை உபதேசம் ,எது முக்கியத்துவம் இல்லாத உபதேசம் என்கிற வேறுபாட்டை புரிந்து கொள்கிற வரை இந்த அவலங்கள் தொடரும்.
இந்த நிலைமை சபைக்கு ஒரு ஆபத்தான நிலைமை.
வேதம் என்றைக்கு தனிநபர்களின் உபதேசங்களுக்கு பின்னாக தள்ளப்பட்டு விட்டதோ அன்றைக்கு சபை சாத்தானின் கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டது என்பதில்எந்த சந்தேகமும் கிடையாது.
“The church does not possess an authority of itself; rather, the church is under the authority of Scripture, and we ought only to go as far as the Bible in determining what is essential to the Gospel.”