இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8
உங்கள் சிந்தனைக்கு:
இரண்டு அரசர்கள் புத்தகம் – வேதப் பாடம் 8
நாகமான் நமக்கு உணர்த்தும் பாடங்கள் என்ன?
நாகமான் சீரிய அரசனின் படைத்தளபதியாய் இருந்தவன். இவனைக் கொண்டு யெகோவா சீரியருக்கு வெற்றியைக் கொடுத்திருந்தபடியால், அவன் தன் அரசனின் பார்வையில் மிகவும் மதிக்கப்படுவனாகவும் முக்கியமானவனாகவும் இருந்தான்.
பலம் வாய்ந்த போர் வீரனாயிருந்தாலும், அவன் குஷ்டரோகியாக இருந்தான்.
அவன் வீட்டில், இஸ்ரேல் தேசத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு சிறிய பெண் வேலைக்காரியாக இருந்தாள். அவள் தன் எஜமானியை நோக்கி:
“என் எஜமான் சமாரியாவிலிருக்கிற இறைவாக்கினனிடம் போனால், அவர் இந்தக் குஷ்டரோகத்தைச் சுகப்படுத்துவார்” என்றாள்.
சீரியாவின் மிகப் பெரிய படைத்தளபதி தன் வீட்டில் வேலை செய்யும் அந்த அடிமைப் பெண்ணின் ஆலோசனையை செவிமடுக்கத் தன்னைத் தாழ்த்தி, இஸ்ரேல் தேசத்திற்கு செல்லத் தீர்மானித்தான். சீரியா தேசத்து மன்னனும் அதை அனுமதித்தது. கூடவே, இன்றைய மதிப்பில் சுமார் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள வெள்ளி, தங்கம் மற்றும் மாட்டு உடைகளையும் எடுத்துச் செல்ல அனுமதித்தான்.
(ஆதாரம்: The IVP Bible Background Commentary).
நாகமான் இறைவாக்கினன் எலிசாவைச் சந்தித்தபோது, எலிசா நேரில் வராமல் தன் வேலையாள் மூலமாக:
“நீர் போய் யோர்தானில் ஏழுமுறை முழுகும்; அப்போது உமது சரீரம் மீண்டும் முன்போல் சுத்தமாகும்” என்று சொல்ல சொன்னான்.
இதைக் கேட்ட நாகமான் கடும் கோபமடைந்தான். அந்தக் காலங்களில் நோய்களைப் போக்க மத குருமார்கள் தங்கள் தேவர்களை புகழ்ந்து, சில மந்திரங்களைச் சொல்லி, நோய் பட்ட இடத்தில் கைகளை வைத்து பூஜைகள் செய்தே சுகப்படுத்துவார்கள். இந்த நம்பிக்கைதான் அவனுக்கிருந்தது.
அதேபோல் எலிசா செய்யப்போவான் என்று நினைத்து இருந்தான். ஆனால் எதிர்பாராதபடி எலிசா நேரில் கூட வராமல் வேலையாட்கள் மூலமாக மூலம் நதியில் மூழ்க சொன்னதை அவன் மனப்பூர்வமாக ஏற்கவில்லை.
அவன் தன் நாட்டிற்கு கிளம்ப தயாரானான்
அப்போது அவனுடைய வேலைக்காரர்கள் அவனிடம் சொன்னான்
:
“என் தகப்பனே, அந்த இறைவாக்கினன் உம்மை பெரியதொரு காரியம் செய்யுமாறு கூறியிருந்தால், அதைச் செய்திருப்பீர்களே! ‘கழுவிச் சுத்தமாகும்’ என்று கூறும்போது, இன்னும் கூடுதலாக கீழ்ப்படிய வேண்டியதுதானே?” (2 இராஜாக்கள் 5:13)
.
இந்த அறிவுரையை கேட்டு நாகமான் தன்னைத் தாழ்த்தி, யோர்தானில் ஏழுமுறை முழுகினான். அதனால் அவன் குஷ்டரோகத்திலிருந்து முழுவதும் சுகமடைந்தான்.
இதுதான் இந்த நிகழ்வின் மிகப் பெரிய திருப்புமுனை.
ஒரு மிகப்பெரிய படைத்தளபதி தன்னை விட உலகப்பிரகாரமாக மிகவும் கீழான இடத்தில் இருந்த வேலைக்காரனின் அறிவுரையைக் கேட்டு அதன்படி நடந்து விடுதலை பெற்றான். அவனுடைய தாழ்மையே அவனுக்கு சுகத்தை வழங்கியது.
இந்த வேத பகுதியின் மூலம் நமக்கு கிடைக்கும் முக்கியமான பாடங்கள்:
மனத் தாழ்மை வேதம் மிக முக்கியமாக போதிக்கும் தத்துவம்.
இயேசு கூறியபடி, தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான்.
உண்மையான தலைவன் யாரிடமிருந்தும் வரும் நல்ல ஆலோசனையை ஏற்றுக்கொள்வான்.
பெருமையால் நல்ல ஆலோசனைகளை நிராகரிப்பது நமக்கே நஷ்டமாக முடியும்.
மறுபடியும் பிறந்த விசுவாசிகள் தங்கள் சுயத்தை வெறுத்து விரட்ட வேண்டிய இரண்டு பெரிய பாவங்கள்: பெருமை மற்றும் பொறாமை.
இது என்னுடைய பார்வை:
கடவுள் நமக்கு அறிவுரையை – அது யார் மூலம் வந்தாலும் – எப்போதும் தாழ்மையுடன் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையை தாராக!
எசேக்கியேல் சண்முகவேல்