10 கோத்திரங்கள் அழிந்துவிட்டதா?
*உங்கள் சிந்தனைக்கு* :
10 கோத்திரங்கள்
அழிந்துவிட்டதா?
Lost 10 tribes
சாலொமொன் அரசனுக்கு பிறகு, இஸ்ரவேல் ராஜ்யம் இரண்டு பகுதியாகப் பிரிந்தது.
வடக்கு ராஜ்யம் “இஸ்ரவேல் "என்று அழைக்கப்பட்டது.
அந்த அரசில் 10 கோத்திரங்கள் காணப்பட்டது.
எப்பிராயீம், மனாசே, ஈசாசர், செபுலோன், ரூபன், காத், ஆசேர், நப்தலி, தானு, சிமியோன் ஆகிய இவைகளே அந்தப் பத்து கோத்திரங்கள்.
தெற்கு ராஜ்யம் “ *யூதா* ” என்று அழைக்கப்பட்டது.
யூதா மற்றும் பென்யமீன் ஆகிய கோத்திரங்கள் இந்த ராஜ்யத்தில் அடங்கும்.
இஸ்ரவேல் ராஜ்யத்தின் அழிவு
கி.மு. 722-ல் அசீரிய அரசன் சல்மனாசார் இஸ்ரவேலை கைப்பற்றி மக்களை சிறை பிடித்துச் சென்றான்.
(2 இராஜா. 17:5–6).
அவர்கள் அசீரியப் பேரரசின் பல பகுதிகளுக்கு சிதறடிக்கப்பட்டார்கள்.
அப்படி அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்டவர்கள் அங்கேயே இருந்ததாகவும் திரும்பி வரவில்லை எனவும் நாம் அறியக் கூடியதாக இருக்கிறது.
(2.இராஜா. 17:23)
1 நாளாகமம் 5:26 ல் அசீரிய அரசனின் காலத்தில் கிழக்குப் பகுதிகளில் குடியிருந்த ரூபன், காத், மனாசே கோத்திரத்தையும் அசீரியர் அழைத்துச் சென்றதாகக் குறிப்பிடுகிறது.
மேலும் எஸ்றா, நெகேமியா புத்தகத்தில் யூதா, பென்யமீன், லேவியர்கள் தான் (எஸ்றா 1:5) மறுபடியும் தங்கள் நாட்டிற்கு வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த இடத்தில் அசீரியா தேசத்திற்கு அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட ஜனங்கள் திரும்பி வந்ததாக சொல்லப்படவில்லை.
இந்த வசனங்களை அடிப்படையாக வைத்துக் கொண்டு பத்து கோத்திரங்கள் அழிந்துவிட்டது.
இந்த இரண்டு கோத்திரங்களை கொண்டதுதான் இஸ்ரவேல் தேசம் என்று நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது.
புதிய ஏற்பாட்டில் இவர்களைக் குறித்து என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
பத்து கோத்திரங்கள் அடங்கிய இஸ்ரவேல் ராஜ்யம் அசீரியரால் கைப்பற்றப்பட்ட ஆண்டு கிமு 722.
அதற்குப் பிறகு சுமார் 750 ஆண்டுகளுக்குப் பிறகு யூதர்களை 12 கோத்திரங்கள் என்று இயேசு கிறிஸ்து குறிப்பிடுகிறார்.
“நான் உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்கிறேன், எல்லாக் காரியங்களும் புதுப்பிக்கப்படும் நாளில், மானிட மகனாகிய நான் எனது மகிமையின் அரியணையில் உட்கார்ந்திருப்பேன். என்னைப் பின்பற்றிய நீங்களும் பன்னிரண்டு அரியணைகளில் உட்கார்ந்து, இஸ்ரவேலின் பன்னிரண்டு கோத்திரங்களையும் நியாயந்தீர்ப்பீர்கள்.”
மத்தேயு 19:28.
இதே கருத்தைத் தான் பவுல் "எங்கள் 12 கோத்திரம்" என்று சொல்கிறார். அப். 26;7
யாக்கோபு தன்னுடைய நிருபத்தை சிதறடிக்கப்பட்ட 12 கோத்திரங்களுக்கு எழுதுவதாக குறிப்பிடுகிறார்.(யாக்1:1)
எனவே பத்து கோத்திரங்கள் அழிந்துவிட்டது, மீதம் இருப்பது இரண்டு கோத்திரங்கள் மட்டும்தான். இஸ்ரவேல் தேசம் என்று சொல்வது தவறு.
தம்முடையவர்களை கடவுள் அறிந்திருக்கிறார். அவர்களை ஏற்ற நேரத்தில் இணைத்துக் கொள்வார்.
மேலும் அசீரியா தேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டவர்கள் தனித்தனி குழுக்களாக பின்னாளில் மீதமுள்ள இரண்டு கோத்திரத்தோடு இணைந்து இருக்கலாம் என்று கருதுகிறார்கள்.
வெளிப்படுத்தின விசேஷத்தில் இதைப் பற்றி தெளிவாக பார்க்கலாம்.
பரலோகத்தில் முத்திரையிடப்பட்ட 144000 நபர்களில் சிதறடிக்கப்பட்டதாக சொல்லப்படுகின்ற 10 கோத்திரத்தாரும் அடங்குவார்கள்.(வெளி.7:4)
மேலும் பரலோகத்தைப் பற்றி குறிப்பிடும் பொழுது 12 கோத்திரத்தையும் யோவான் குறிப்பிடுகிறார்
"அந்த நகரத்திற்கு, பெரிய உயர்ந்த மதில் இருந்தது. அந்த மதிலில், பன்னிரண்டு வாசல்கள் இருந்தன. பன்னிரண்டு இறைத்தூதர்கள் அந்த வாசல்களில் நின்றார்கள். அந்த வாசல்களில், இஸ்ரவேல் மக்களின் பன்னிரண்டு கோத்திரங்களின் பெயர்களும் எழுதப்பட்டிருந்தன.
வெளிப்படுத்தல் 21:12.
இதன் மூலம் தேவன் உணர்த்தும் பாடம்.
தேவன் தெரிந்து கொண்ட 12 கோத்திரத்தை யாரும் பிடிக்க முடியாது. அழிக்க முடியாது. மக்கள் பார்வைக்கு அப்படி தோன்றினாலும் தேவன் அவர்களை இணைத்து இருக்கிறார் என்பது புரிந்து கொள்ள வேண்டும்.
ஆபிரகாமின் சந்ததியை இதுவரைக்கும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக யாரும் முற்றிலுமாக அழித்ததில்லை.
இஸ்ரேல் ஜனம் அவர் தெரிந்து கொண்ட ஜனம்.அதைவேளையில்
அவர்களை மட்டாய் தண்டித்து நம்மோடு இணைத்துக் கொள்வார்.
எனவே பத்து கோத்திரங்கள் அழிந்து போய்விட்டது என்று சொல்வது வேதத்தின்படி தவறு.
The people talk about ten lost tribes of Israel," but this is not a biblical concept. God knows where children of Abraham are and He will call them together when it's time. Some nations have claimed to be the descendants of the so-called ten lost tribes.
But these claims are unfounded. Wiersbe
எசேக்கியல்
சண்முகவேல்